ஒரு பொருளை எவ்வாறு பார்க்க வேண்டும் என்று உனக்கும் எனக்கும் சொல்லித் தரப்படுகிறது. அதை விட்டு மாற்றி நம்மால் ஏன் யோசிக்க முடியவில்லை? மதங்களின் நூற்றாண்டில் உலகம் சொல்லித்தந்தது, பூமி தட்டை என்று!! அறிவியல் நூற்றாண்டில் இன்று பூமி துருவங்கள் அமுங்கிய கோளம்! எனவே, தேற்றங்கள் உடைப்பதற்கே! ‍‍ அவை நாம் ஏற்ற‌ங்கள் பெறுவதற்கே!! அடிப்படை யூகங்களை அலசிப் பார்க்கும் முயற்சி! இது!! கடவுள் என்று முடித்து வைக்கப்பட்ட விடை முடிச்சுகளை, அவிழ்த்துப் பார்க்கும் கேள்விக் கூர்வாள் இது!!

Friday, October 10, 2008

அன்புள்ள அக்கா!

ஒரு அக்காவைத் தராததால் தினம்தினம் என் அம்மாவை நொந்து கொண்டதாய் ஞாபகம்!

நான் முதல்வரானால் கட்டுரையில் 'ஒவ்வொரு தம்பிக்கும் அக்கா வேண்டும்' என்று சட்டம் இயற்றியதாய் ஞாபகம்!

அன்றுதான் நீ வந்தாய் ‍என் வீட்டருகில் புதுக்குடித்தனமாய்!!

ஒரே நாளில் எனக்கு அக்காவும் தங்கைகளும் கிடைத்ததாய் உணர்ந்தேன்!

'நான் உன் அக்காடா!' என்று நீ கூற உலகம் மறந்தேன்!
உன் தங்கைகள் அண்ணா என்று அழைக்க உடனே பிறந்தேன்!

ஒரு பெண்ணைக் காத‌லுட‌ன் அணைக்க‌ வ‌ய‌து க‌ற்றுத்த‌ந்த‌து!
தாய்மையுட‌ன் அணைக்க‌ தாய்மை க‌ற்றுத்த‌ந்த‌து!
ஆனால்... பாச‌த்துட‌ன் அணைக்க‌ நீதான் கற்றுத்த‌ந்தாய்!

"எங்க‌ள் த‌லைமுறையில்!
ம‌னித‌ர்க‌ள் இருப்பார்க‌ள்! ம‌த‌ங்க‌ள் இருக்காது!
சாத‌னையாள‌ர்க‌ள் இருப்பார்க‌ள்! சாதிக‌ள் இருக்காது!" - என்ற‌ என‌க்கும் என் த‌ந்தைக்குமான‌ ச‌ண்டையில் என்னைத் தோற்க‌ வைக்கும்ப‌டி
நீ அப்படிக் கேட்டிருக்கக்கூடாது!

"நீ வேற‌ சாதியா?" என்று நீ கேட்ட‌ கேள்வியில் செத்தது
உன் நா ந‌ர‌ம்புக‌ள் ம‌ட்டும‌ல்ல‌ !!
உன் அன்புத் த‌ம்பியின் பாச நெஞ்ச‌மும்தான்!!!

No comments:

About Me

My photo
நான் மட்டும் வெளியில்!!