ஒரு பொருளை எவ்வாறு பார்க்க வேண்டும் என்று உனக்கும் எனக்கும் சொல்லித் தரப்படுகிறது. அதை விட்டு மாற்றி நம்மால் ஏன் யோசிக்க முடியவில்லை? மதங்களின் நூற்றாண்டில் உலகம் சொல்லித்தந்தது, பூமி தட்டை என்று!! அறிவியல் நூற்றாண்டில் இன்று பூமி துருவங்கள் அமுங்கிய கோளம்! எனவே, தேற்றங்கள் உடைப்பதற்கே! ‍‍ அவை நாம் ஏற்ற‌ங்கள் பெறுவதற்கே!! அடிப்படை யூகங்களை அலசிப் பார்க்கும் முயற்சி! இது!! கடவுள் என்று முடித்து வைக்கப்பட்ட விடை முடிச்சுகளை, அவிழ்த்துப் பார்க்கும் கேள்விக் கூர்வாள் இது!!

Saturday, October 11, 2008

சபிக்கப்பட்ட பூமிக்காக! மனிதனாக ஒரு வேண்டுகோள்!

இங்கு ம‌ல‌ரும் ம‌ல‌ர்க‌ள்... ம‌ல‌ர்வ‌ளைய‌த்திற்காக‌ ம‌ட்டும்!
இங்கு ம‌னித‌ க‌ண்க‌ள்... கண்ணீருக்காக‌ ம‌ட்டும்!

உண‌ர்வுக‌ளில், 'ப‌ய‌மும்','துக்க‌மும்' ம‌ட்டுமே வாழுமிட‌ம்!
வார்த்தைக‌ளில், 'ந‌ல்லாயிருக்கீங்களா?' த‌லைம‌றைவான‌ காடு!
வாழ்க்கைக‌ளில், 'ம‌கிழ்ச்சி' எரிக்க‌ப்ப‌ட்ட‌ சுடுகாடு!

இத்த‌னையும்... ஒரு க‌ல்ல‌றை பூமியா?
இல்லவேயில்லை!

க‌ல்ல‌றையில்...
ச‌கோதர‌னின் ம‌ர‌ண‌த்திற்குத் த‌ம்பி அழுவான்!
'மான‌ட‌ ம‌யிலாட‌' வில் திளைத்துக் கொண்டிருக்க‌மாட்டான்!!
த‌ங்கையின் அம‌ங்க‌ல‌த்திற்கு அக்காள் உருகுவாள்!
'மெகா சீரிய‌லில்' ஊறியிருக்க‌மாட்டாள்!!

ஆனால்...
இது ச‌பிக்க‌ப்ப‌ட்ட‌ பூமி!

தாயின் த‌ன‌த்தில் த‌ங்கிவிட்ட‌ குழ‌ந்தைத் த‌விக்கிற‌து! தாய்ம‌ண்ணில் விழ‌!
பெற்றெடுக்க‌த் தாய்க்குத்தான் ம‌ன‌மில்லை!
சாவ‌த‌ற்கென்றே ஒரு பிள்ளையா? வேண்டாம் என்கிறாள்!

Average Salary குறைந்துவிட்டதை,
பெரிய‌ பிர‌ச்சினையாக‌ப் பேசிக்கொண்டிருக்கிறோம் இங்கு!
அதிக‌ப்ப‌ட்ச‌ ச‌ந்தோஷமே,
'இன்று நான் சாக‌வில்லை' என்ப‌துதான் அங்கு!

இத்த‌னைக்குப் பிற‌கும் இந்த‌ சாப‌பூமி எதுவென்று புல‌ப்ப‌டாத‌ கொல‌ம்பஸ்க‌ள்!
கேளிக்கைக‌ளில் ச‌கோத‌ர‌னை ம‌ற‌ந்த‌ சாக்க‌டைப் புழுக்க‌ள்!

ஈழ‌த்த‌மிழ‌னை ம‌ற‌ந்த‌ ஈன‌த்த‌மிழ‌னாய் ஒரு வாழ்க்கையா? வேண்டவே வேண்டாம்!
இன‌ப்ப‌ற்றுடைய த‌மிழின‌த் த‌லைவ‌னாக‌க்கூட‌ வேண்டாம்!!

ம‌னிதாபிமான‌முள்ள‌ ம‌னித‌னாய்க் கேட்க்கிறோம்!! வேண்டும் ஈழ‌சுத‌ந்திர‌ம்!

1 comment:

Shakthi said...

தலை வணங்குகிறென் என் சகோதரனின் கவிதைக்கும் அதில் பொதிந்த உயிர் கருத்துக்கும்

About Me

My photo
நான் மட்டும் வெளியில்!!