ஒரு பொருளை எவ்வாறு பார்க்க வேண்டும் என்று உனக்கும் எனக்கும் சொல்லித் தரப்படுகிறது. அதை விட்டு மாற்றி நம்மால் ஏன் யோசிக்க முடியவில்லை? மதங்களின் நூற்றாண்டில் உலகம் சொல்லித்தந்தது, பூமி தட்டை என்று!! அறிவியல் நூற்றாண்டில் இன்று பூமி துருவங்கள் அமுங்கிய கோளம்! எனவே, தேற்றங்கள் உடைப்பதற்கே! ‍‍ அவை நாம் ஏற்ற‌ங்கள் பெறுவதற்கே!! அடிப்படை யூகங்களை அலசிப் பார்க்கும் முயற்சி! இது!! கடவுள் என்று முடித்து வைக்கப்பட்ட விடை முடிச்சுகளை, அவிழ்த்துப் பார்க்கும் கேள்விக் கூர்வாள் இது!!

Tuesday, January 18, 2011

இறைசிற்பம்

 
இறை சிற்பி துன்பத்தால் செதுக்கும் சிற்பம் நீ!
செதுக்குகையில் உடையும் சிற்பங்களுமுண்டு!
செதுக்க செதுக்க உயர்ந்து உயர்ந்து சிதைக்க சிதைக்க வளர்ந்து வளர்ந்து
மாடத்தில் மிளிரும் சிலைக்களுமுண்டு !

உளி தரும் வலிதான்
சிலைபெறும் உயிர்!

உடைத்துப்பார்க்க சிற்பியும் விரும்புவதில்லை!
சிற்பமும் விரும்புவதில்லை!!!
ஆனால்
உடைந்தேவிடுகிறது சிற்பம்!


கல்லின் வலியும்
உளியின் வலுவும் தெரிந்த சிற்பி செதுக்குகையில் உடைவது
கல்லின் பிழையே !

மனிதா!
இறைவனின் இறைசிற்பமே!
இனியாவது உடைந்து உடைந்து பழகாமல்,
உயர்ந்து உயர்ந்து பழகு!

About Me

My photo
நான் மட்டும் வெளியில்!!