நிலா என் தீவுக்கடியில்...

ஒரு பொருளை எவ்வாறு பார்க்க வேண்டும் என்று உனக்கும் எனக்கும் சொல்லித் தரப்படுகிறது. அதை விட்டு மாற்றி நம்மால் ஏன் யோசிக்க முடியவில்லை? மதங்களின் நூற்றாண்டில் உலகம் சொல்லித்தந்தது, பூமி தட்டை என்று!! அறிவியல் நூற்றாண்டில் இன்று பூமி துருவங்கள் அமுங்கிய கோளம்! எனவே, தேற்றங்கள் உடைப்பதற்கே! ‍‍ அவை நாம் ஏற்ற‌ங்கள் பெறுவதற்கே!! அடிப்படை யூகங்களை அலசிப் பார்க்கும் முயற்சி! இது!! கடவுள் என்று முடித்து வைக்கப்பட்ட விடை முடிச்சுகளை, அவிழ்த்துப் பார்க்கும் கேள்விக் கூர்வாள் இது!!

Tuesday, January 18, 2011

இறைசிற்பம்

 
இறை சிற்பி துன்பத்தால் செதுக்கும் சிற்பம் நீ!
செதுக்குகையில் உடையும் சிற்பங்களுமுண்டு!
செதுக்க செதுக்க உயர்ந்து உயர்ந்து சிதைக்க சிதைக்க வளர்ந்து வளர்ந்து
மாடத்தில் மிளிரும் சிலைக்களுமுண்டு !

உளி தரும் வலிதான்
சிலைபெறும் உயிர்!

உடைத்துப்பார்க்க சிற்பியும் விரும்புவதில்லை!
சிற்பமும் விரும்புவதில்லை!!!
ஆனால்
உடைந்தேவிடுகிறது சிற்பம்!


கல்லின் வலியும்
உளியின் வலுவும் தெரிந்த சிற்பி செதுக்குகையில் உடைவது
கல்லின் பிழையே !

மனிதா!
இறைவனின் இறைசிற்பமே!
இனியாவது உடைந்து உடைந்து பழகாமல்,
உயர்ந்து உயர்ந்து பழகு!

Saturday, October 11, 2008

சபிக்கப்பட்ட பூமிக்காக! மனிதனாக ஒரு வேண்டுகோள்!

இங்கு ம‌ல‌ரும் ம‌ல‌ர்க‌ள்... ம‌ல‌ர்வ‌ளைய‌த்திற்காக‌ ம‌ட்டும்!
இங்கு ம‌னித‌ க‌ண்க‌ள்... கண்ணீருக்காக‌ ம‌ட்டும்!

உண‌ர்வுக‌ளில், 'ப‌ய‌மும்','துக்க‌மும்' ம‌ட்டுமே வாழுமிட‌ம்!
வார்த்தைக‌ளில், 'ந‌ல்லாயிருக்கீங்களா?' த‌லைம‌றைவான‌ காடு!
வாழ்க்கைக‌ளில், 'ம‌கிழ்ச்சி' எரிக்க‌ப்ப‌ட்ட‌ சுடுகாடு!

இத்த‌னையும்... ஒரு க‌ல்ல‌றை பூமியா?
இல்லவேயில்லை!

க‌ல்ல‌றையில்...
ச‌கோதர‌னின் ம‌ர‌ண‌த்திற்குத் த‌ம்பி அழுவான்!
'மான‌ட‌ ம‌யிலாட‌' வில் திளைத்துக் கொண்டிருக்க‌மாட்டான்!!
த‌ங்கையின் அம‌ங்க‌ல‌த்திற்கு அக்காள் உருகுவாள்!
'மெகா சீரிய‌லில்' ஊறியிருக்க‌மாட்டாள்!!

ஆனால்...
இது ச‌பிக்க‌ப்ப‌ட்ட‌ பூமி!

தாயின் த‌ன‌த்தில் த‌ங்கிவிட்ட‌ குழ‌ந்தைத் த‌விக்கிற‌து! தாய்ம‌ண்ணில் விழ‌!
பெற்றெடுக்க‌த் தாய்க்குத்தான் ம‌ன‌மில்லை!
சாவ‌த‌ற்கென்றே ஒரு பிள்ளையா? வேண்டாம் என்கிறாள்!

Average Salary குறைந்துவிட்டதை,
பெரிய‌ பிர‌ச்சினையாக‌ப் பேசிக்கொண்டிருக்கிறோம் இங்கு!
அதிக‌ப்ப‌ட்ச‌ ச‌ந்தோஷமே,
'இன்று நான் சாக‌வில்லை' என்ப‌துதான் அங்கு!

இத்த‌னைக்குப் பிற‌கும் இந்த‌ சாப‌பூமி எதுவென்று புல‌ப்ப‌டாத‌ கொல‌ம்பஸ்க‌ள்!
கேளிக்கைக‌ளில் ச‌கோத‌ர‌னை ம‌ற‌ந்த‌ சாக்க‌டைப் புழுக்க‌ள்!

ஈழ‌த்த‌மிழ‌னை ம‌ற‌ந்த‌ ஈன‌த்த‌மிழ‌னாய் ஒரு வாழ்க்கையா? வேண்டவே வேண்டாம்!
இன‌ப்ப‌ற்றுடைய த‌மிழின‌த் த‌லைவ‌னாக‌க்கூட‌ வேண்டாம்!!

ம‌னிதாபிமான‌முள்ள‌ ம‌னித‌னாய்க் கேட்க்கிறோம்!! வேண்டும் ஈழ‌சுத‌ந்திர‌ம்!

உன் குறிப்பேற்றம்

நீ எளிதில் உன்னை என்னில் ஏற்றிவிட்டாய்!

என் வாழ்க்கைதான் த‌ற்குறிப்பேற்ற‌த்தில் த‌விக்கிற‌து!

காற்றில் ஆடும் இலைகூட‌

உன்ன‌சைவை ஞாப‌க‌ப்ப‌டுத்த‌!

உன்னை ம‌ற‌க்க‌ச் செய்ய‌த்தான்

என்னுலகில் அசைவுகளே இல்லை!

Friday, October 10, 2008

அன்புள்ள அக்கா!

ஒரு அக்காவைத் தராததால் தினம்தினம் என் அம்மாவை நொந்து கொண்டதாய் ஞாபகம்!

நான் முதல்வரானால் கட்டுரையில் 'ஒவ்வொரு தம்பிக்கும் அக்கா வேண்டும்' என்று சட்டம் இயற்றியதாய் ஞாபகம்!

அன்றுதான் நீ வந்தாய் ‍என் வீட்டருகில் புதுக்குடித்தனமாய்!!

ஒரே நாளில் எனக்கு அக்காவும் தங்கைகளும் கிடைத்ததாய் உணர்ந்தேன்!

'நான் உன் அக்காடா!' என்று நீ கூற உலகம் மறந்தேன்!
உன் தங்கைகள் அண்ணா என்று அழைக்க உடனே பிறந்தேன்!

ஒரு பெண்ணைக் காத‌லுட‌ன் அணைக்க‌ வ‌ய‌து க‌ற்றுத்த‌ந்த‌து!
தாய்மையுட‌ன் அணைக்க‌ தாய்மை க‌ற்றுத்த‌ந்த‌து!
ஆனால்... பாச‌த்துட‌ன் அணைக்க‌ நீதான் கற்றுத்த‌ந்தாய்!

"எங்க‌ள் த‌லைமுறையில்!
ம‌னித‌ர்க‌ள் இருப்பார்க‌ள்! ம‌த‌ங்க‌ள் இருக்காது!
சாத‌னையாள‌ர்க‌ள் இருப்பார்க‌ள்! சாதிக‌ள் இருக்காது!" - என்ற‌ என‌க்கும் என் த‌ந்தைக்குமான‌ ச‌ண்டையில் என்னைத் தோற்க‌ வைக்கும்ப‌டி
நீ அப்படிக் கேட்டிருக்கக்கூடாது!

"நீ வேற‌ சாதியா?" என்று நீ கேட்ட‌ கேள்வியில் செத்தது
உன் நா ந‌ர‌ம்புக‌ள் ம‌ட்டும‌ல்ல‌ !!
உன் அன்புத் த‌ம்பியின் பாச நெஞ்ச‌மும்தான்!!!

பலனில்லை

கருப்பாய் இருக்கிறாள்!

ஒல்லியாய் இருக்கிறாள்!

நல்லவளில்லை!

அசிங்கமாய் இருக்கிறாள்!

சொல்லித்தான் பார்க்கிறேன்!

உன் முன் மண்டியிட்டு, வாய் பிளந்து நிற்கும்,
என் மனதிடம்!!

சித்த‌ர்களில் சேருங்க‌ள்

நித‌ம் நித‌ம் மூச்சை ம‌ட்டுமே விழுங்கி,

உயிர் வ‌ள‌ர்க்கும் எங்க‌ள் ஏழைச் சிறார்க‌ள்!!

இவ‌ர்களுக்கும் ப‌சிப்ப‌தில்லை!

இருப்ப‌வ‌ன் இருந்தால் விர‌த‌ம்!

இல்லாத‌வ‌ன் இருந்தால் ப‌ட்டினி!

க‌ரும‌ம்..

கொடுத்துத்தான் பாருங்க‌ளேன்!!

சிலுவை ரத்தம் வீணா

இன்னுமா வற்றவில்லை இந்த மரங்கள்!
ம‌னித‌ பாவ‌ங்க‌ளுக்காக‌ இறைவனை சிலுவையில் அறைய!

சொல்லிவிடாதீர்கள்! இந்த மனிதர்களிடம்!
மனித பாவங்களுக்காக இறைவன் சிலுவையில்
அறைய‌ப்படுவ‌தாக‌...
இவ‌ர்க‌ளே அறைந்துவிடுவார்க‌ள்!
த‌ங்க‌ள் பாவ‌ங்களைப் போக்கிக் கொள்ள‌!!

About Me

My photo
நான் மட்டும் வெளியில்!!