ஒரு பொருளை எவ்வாறு பார்க்க வேண்டும் என்று உனக்கும் எனக்கும் சொல்லித் தரப்படுகிறது. அதை விட்டு மாற்றி நம்மால் ஏன் யோசிக்க முடியவில்லை? மதங்களின் நூற்றாண்டில் உலகம் சொல்லித்தந்தது, பூமி தட்டை என்று!! அறிவியல் நூற்றாண்டில் இன்று பூமி துருவங்கள் அமுங்கிய கோளம்! எனவே, தேற்றங்கள் உடைப்பதற்கே! ‍‍ அவை நாம் ஏற்ற‌ங்கள் பெறுவதற்கே!! அடிப்படை யூகங்களை அலசிப் பார்க்கும் முயற்சி! இது!! கடவுள் என்று முடித்து வைக்கப்பட்ட விடை முடிச்சுகளை, அவிழ்த்துப் பார்க்கும் கேள்விக் கூர்வாள் இது!!

Sunday, September 21, 2008

உடைந்த கடிவாளம்

அவன் ஒரு நல்ல தேரோட்டி!

தன் கடிவாளத்தை தானே உடைத்து விட்டபோதும்!!

அவன் ஒரு நல்ல தொழிலாளி!

தன் முத்தொழிலையும் தாரைவார்த்துவிட்டபோதும்!!

‌அவன் ஒரு மானங்கெட்டவன்!

த‌ன் இருப்பையே ச‌ந்தேகித்த‌வ‌ர்க‌ளை ச‌கித்துகொள்ளும்போது!!

இப்போது அவ‌ன் கையிலிருப்ப‌து,

அந்த‌ உடைந்த‌ க‌டிவாள‌மும்,

உருவாக்கிய‌வ‌ன் என்ற‌ பேரும்தான்!!

ஆனால்...

இன்றும் எல்லாம் அவ‌ன் செய‌ல்!!

தீவிர‌வாத‌ தாக்குத‌ல் உட்ப‌ட‌!!

No comments:

About Me

My photo
நான் மட்டும் வெளியில்!!